• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மணக்கோலத்தில் சிலம்பம் சுழற்றி அசத்திய நிஷாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கனிமொழி!

மணக்கோலத்தில் சிலம்பம் சுழற்றி அசத்திய நிஷாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கனிமொழி!

கனிமொழி - நிஷா

கனிமொழி - நிஷா

மணக்கோலத்தில் சிலம்பக் கலையை ஆடி அசத்திய நிஷாவை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

  • Share this:
    தனது திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்தில் சிலம்பம் சுழற்றி அசத்திய நிஷாவை நேரில் அழைத்து பேசிய திமுக எம்.பி. கனிமொழி, அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகர் அருகேயுள்ள தேமாங்குளத்தில் ராஜ்குமார், நிஷா ஆகியோருக்கு கடந்த மாதம திருமணம் நடந்தது. திருமண ஊர்வலத்தில் மணப்பெண் நிஷா, பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு மற்றும் சிலம்பம் ஆகியவற்றை லாகவமாக சுழற்றி அசத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதை பார்த்து, திருமணத்திற்கு வந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். இந்த காட்சிகளை பார்த்து திருமண மாப்பிள்ளை உற்சாகம் அடைந்தார். உறவினர்களும் நெகிழ்ந்து போனார்கள். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்றைக்கு சிலம்பம், உள்பட தமிழர்களின் பாரம்பரிய கலைகளை கற்கும் எண்ணம் நிஷாவின் வீடியோ பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    Read More : ராஜ்கிரணுடனான இந்த சந்திப்பு தான் வடிவேலுவின் சினிமா பயணத்தின் தொடக்கம் ! சுவாரஸ்யமான கதை..

     



    இந்நிலையில் தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி, இதை அறிந்து வியந்ததாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து, திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்தில் சிலம்பக் கலையை ஆடி அசத்திய நிஷாவை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    Must Read : வரிகட்டுங்க விஜய் Vs கடனை அடைங்க அஜித்.. ட்விட்டரில் போட்டி போடும் அஜித் ,விஜய் ரசிகர்கள் - இன்றைய ட்ரெண்டிங்

    திருமண விழாக்களில் மணப்பெண், மணமகன் இடையே சின்ன சின்ன குறும்பு விளையாட்டுக்கள் காலம் காலமாக இடம் பெற்று வருவது வழக்கம். இதுபோன்ற குறும்பு விளையாட்டுகள், திருமண வீட்டையும் கலகலப்பாக வைத்திருக்கும். அப்படி கலகலப்பாக்கிய நிஷாவை உற்சாகப்படுத்தியுள்ளார் கனிமெழி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: