ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

"அண்ணா.. அப்பா இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன்".. ஸ்டாலினைக் குறிப்பிட்டு கண்கலங்கிய கனிமொழி..!

"அண்ணா.. அப்பா இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன்".. ஸ்டாலினைக் குறிப்பிட்டு கண்கலங்கிய கனிமொழி..!

கனிமொழி

கனிமொழி

வெற்றிடத்தில் காற்றாக இல்லாமல் , ஆழிப்பேரலையாக எழுந்து நின்றார் ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai | Chennai [Madras]

  "அண்ணா... அப்பா இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன் , எப்போதும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்பேன்..." என துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற கனிமொழி கண்கலங்கிய படி தெரிவித்துள்ளார்.

  சென்னையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் 15வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட ஒன்றிய, நகர, நகரிய , பேரூர், பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

  இதில், திமுகவின் தலைவராக 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து துணைப்பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. தேர்வு செய்யப்பட்டார்.

  இதையடுத்து பொதுக்குழு மேடையில் பேசிய அவர், திமுக உருவானோபோது பெரியாருக்கும் திமுக தலைவர்களுக்கும் இருந்த சிறிய இடைவெளி அண்ணாவை உறுத்தியது. எனவே பெரியார் போற்றும் வகையில் ஆட்சி நடத்த வேண்டும் என்றார் அண்ணா.

  இதையும் படிங்க | திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு! தலைவராக ஸ்டாலின்! திமுக பொதுக்குழு நியமன விவரம்!

  அண்ணா முதல்வரான பிறகு ஆட்சி வந்து விட்டதே , கட்சி போய்விடுமோ என்று அஞ்சினார். ஆனால் மாநில சுயாட்சி , இந்தி எதிர்ப்பு, சமூக நீதி போன்ற அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்றினார் கருணாநிதி.

  கருணாநிதி இறந்த பிறகு திமுகவில் வெற்றிடம் உருவாக வேண்டும் என திமுகவின் பரம்பரை பகைவர்கள் பலர் எதிர்பார்த்தனர் , அவர்களின் சாம்ராஜ்யத்தை தகர்த்து , வெற்றிடத்தில் காற்றாக இல்லாமல் , ஆழிப்பேரலையாக எழுந்து நின்றார் ஸ்டாலின்.

  பெண்களை மீண்டும் சமையலறைக்குள் அடைக்க புதிய கல்விக் கொள்கை முயல்கிறது. அப்பா இல்லாத இடத்தில் இந்த நாடு உங்களை வைத்து பார்க்கிறது. அதே போல், அண்ணா.. அப்பா இல்லாத இடத்தில் நானும் உங்களை வைத்து பார்க்கிறேன். உங்கள் வழியில் , உங்கள் அடியில் பின்தொடர்ந்து , உங்கள் போராட்டம் அனைத்துக்கும் பின்னால் அணிவகுக்க நான் தயாராக உள்ளேன். என தெரிவித்துள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, CM MK Stalin, DMK, Kanimozhi, MK Stalin