ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

என்ன பழக்கம் இது.. சட்டென கோபமாக கத்திய கனிமொழி.. வைரலாகும் வீடியோ..!

என்ன பழக்கம் இது.. சட்டென கோபமாக கத்திய கனிமொழி.. வைரலாகும் வீடியோ..!

கனிமொழி

கனிமொழி

மிகவும் உரிமையாக அந்த பெண்ணிடம் கோபம் கொண்ட கனிமொழி, பிறகு சிறுமிக்கு சுயமரியாதை பாடம் புகட்டினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai | Chennai [Madras]

  தனது காலை தொட்டு வணங்க முயன்ற சிறுமியிடம் அது தவறு என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. அறிவுறுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  சென்னையில் நேற்று திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் தலைவராக மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். மேலும் திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. தேர்வு செய்யப்பட்டார். இதற்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கனிமொழியை தொடர்பு கொண்டு அவரது வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து பல நிர்வாகிகளும் கனிமொழிக்கு அவர்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

  இந்த நிலையில், திமுக மகளிரணி செயலாளராக கனிமொழி இருப்பதால், மகளிரணி சார்பில், ஏராளமான பெண்கள் நேற்று கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

  ALSO READ | "அண்ணா.. அப்பா இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன்".. ஸ்டாலினைக் குறிப்பிட்டு கண்கலங்கிய கனிமொழி..!

  தொடர்ந்து, நிர்வாகி ஒருவர் தனது பெண் குழந்தையுடன் சென்று கனிமொழியை நேரில் சந்தித்தார். அப்போது கனிமொழி காலில் அந்த பெண் குழந்தை விழுந்தது. இதனை கண்டு கோபமடைந்த கனிமொழி, என்னமா இது.. என்ன பழக்கம் இது.. எதுக்கு குழந்தை எல்லாம் காலில் விழுறாங்க.. இது ரொம்ப தப்பு என தெரிவித்தார்.

  மிகவும் உரிமையாக அந்த பெண்ணிடம் கோபம் கொண்ட கனிமொழி, பிறகு சிறுமியிடம், இப்படி எல்லாம் யார் காலிழும் விழ கூடாது. இந்த பழக்கம் எல்லாம் இருக்கவே கூடாது என கன்னத்தை பிடித்து அறிவுரை கூறினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: DMK, Kanimozhi, Viral Video