ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொரோனா வராது எனக்கூறிய திமுக தொண்டரால் எழுந்த சிரிப்பலை.. முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவுறுத்திய கனிமொழி எம்.பி.,

கொரோனா வராது எனக்கூறிய திமுக தொண்டரால் எழுந்த சிரிப்பலை.. முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவுறுத்திய கனிமொழி எம்.பி.,

கனிமொழி எம்.பி

கனிமொழி எம்.பி

முகக்கவசம் அணியாத திமுக நிர்வாகிகளை அன்பாக கடிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அதன் அவசியத்தை அறிவுறுத்தினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

முகக்கவசம் அணியாத திமுக நிர்வாகிகளை அன்பாக கடிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அதன் அவசியத்தை அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் குறைகேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக,எம்.பி.,கனிமொழி கலந்துகொண்டு பேசினார். அப்போது திமுக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலரும் முககவசம் அணியாமல், சமூக இடைவெளி இல்லாமல்  இருந்ததை சுட்டிக்காட்டி பேசிய கனிமொழி, கொரோனா இன்னும் நம்மைவிட்டு போகவில்லை. நாம் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணியவேண்டும், சமுக இடைவெளி விட்டு நிற்க வேண்டும். கொரோனா என்பது ஒரு வைரஸ், அது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

அமைச்சர்கள் முதல் பணியாளர்கள் வரை கொரோனா வந்துள்ளது. எனவே எனக்கு வராது என்ற எண்ணத்தில் இருக்க வேண்டாம் ஏனெனில்  உங்களுக்கு அறியாமலேயே உங்களிடம் வந்து வீட்டில் உள்ளவர்களுக்கும் உங்கள் மூலம் கொரோனா வந்துவிடும் என்றார்.அவர் பேசிக்கொண்டு இருந்தபோதே  கூட்டத்தில் இருந்த ஒருவர் எங்களுக்கு கொரோனா வராது என்று கூற கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி., செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாஜகவில் சினிமா பிரபலங்கள் இணைவது குறித்து கேட்ட கேள்விக்கு  பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படைக் கொள்கை மக்களைப் பிரித்து, வாக்கு வங்கிகளாக மாற்றுவது தான் மக்களிடம் துவேஷத்தை தூண்டி, வெறுப்புணர்வை தூண்டி வாக்கு வங்கிகளாக மாற்றுவதை தமிழகம் என்றும்  ஏற்றுக்கொள்ளாது. இப்படிப்பட்ட அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை பாரதிய ஜனதா கட்சி புரிந்து கொள்ள வேண்டும்.யார் வேண்டுமானாலும் தங்களை எந்தக் கட்சியிலும் இணைத்துக் கொள்ளலாம். அடிப்படையில் அந்த இயக்கம் எதற்காக நிற்கிறது. அந்த இயக்கத்தின் (பாஜக) உண்மையான முகம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.

Published by:Gunavathy
First published:

Tags: CoronaVirus, Kanimozhi, Thoothukudi