ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கனிமொழி - உதயநிதி இடையே அதிகார போட்டி?

கனிமொழி - உதயநிதி இடையே அதிகார போட்டி?

திமுக இளைஞரணியில் இளம் பெண்களை இணைத்துள்ளது மகளிரணி செயலாளரான கனிமொழிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

திமுக இளைஞரணியில் இளம் பெண்களை இணைத்துள்ளது மகளிரணி செயலாளரான கனிமொழிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

திமுக இளைஞரணியில் இளம் பெண்களை இணைத்துள்ளது மகளிரணி செயலாளரான கனிமொழிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

 • 2 minute read
 • Last Updated :

  திமுக மகளிரணி செயலாளரான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம், கட்சி விவகாரத்தில் அவருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே உரசல் ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் வாரிசான உதயநிதி ஸ்டாலின் கட்சியின் இளைஞரணித் தலைவராக செயல்பட்டு வருகிறார், இந்நிலையில் கடந்த டிசம்பர் 26ம் தேதியன்று கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் உதயநிதி முன்னிலையில் சுமார் 2,000 இளம் பெண்கள் கட்சியில் இணைக்கப்பட்டனர். இதில் பெரும்பாலான பெண்கள் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். இந்நிகழ்ச்சி ஸ்டாலினின் ஒப்புதலுடன் நடைபெற்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  இளைஞரணியில் பெண்களை இணைத்துள்ளது மகளிரணி செயலாளரான கனிமொழிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் கோவை நிகழ்ச்சி நடைபெற்ற அன்றைய தினம் தான் கனிமொழி மகளிரணியினருக்கான அறிவிக்கை ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

  கடந்த காலங்களில் இளைஞரணி மாவட்ட செயலாளர்கள் சிலர் இளைஞரணிக்குள் தனியாக இளம் பெண்கள் அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த முயற்சியும் தலைமையின் ஆதரவோடு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், இளம் பெண்கள் அணி என்ற ஒன்று உருவாக்கப்பட்டால், அதன் பின்னர் மகளிரணி என்பது வயதானவர்களின் அணி போல தோன்றும் என அச்சமயம் கனிமொழி எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரியவந்தது. தற்போது உதயநிதி தலைமையில் நடைபெற்றிருக்கும் கோவை நிகழ்ச்சி மீண்டும் இளம் பெண்கள் அணியை உருவாக்கும் முயற்சியா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

  Also read:  இந்த வங்கியில் 10,000க்கு மேல் வரவு வைத்தாலே இனி கட்டணம் வசூல் - 2022 ஜனவரி 1 முதல் புதிய விதி அமல்!

  கட்சியில் இரு பிரிவினருக்கு இடையேயான உள்கட்சிப் போட்டி என்பதும் இது அவர்களின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கானது மட்டுமே என கட்சியின் ஒரு சாரார் தெரிவித்த போதிலும், கனிமொழி, முடிந்தவரை அதிகமான உறுப்பினர்களைச் சேர்க்குமாறு தனது பிரிவின் நிர்வாகிகளை தொடர்ந்து வலியுறுத்திய போதிலும், கட்சியினுள் உள்ள அதிகார மையங்களிலிருந்து தொண்டர்களும் நிர்வாகிகளும் ஒரு குறிப்பைப் பெற்றதாக மற்றொரு சாரார் கூறினர்.

  மேலும் வலுவான தலைமை ஆதரவை உதயநிதி பெற்றிருக்கும் போது, கனிமொழியால் அவருடைய எல்லைக்குள் உதயநிதி நுழைவதை தடுக்க இயலவில்லை.

  Also read:  காங்கிரஸ் கொடியேற்ற நிகழ்ச்சியில் சோனியா காந்திக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

  ஒவ்வொரு கட்சிக்கும் இளம் ரத்தம் தேவை. இளைஞர் அணி மற்றும் மகளிர் பிரிவு தலைவர்களின் அரசியல் எதிர்காலம் இந்த உறுப்பினர்களுக்கு அவர்கள் அளிக்கும் கருத்தியல் பயிற்சியின் அடிப்படையிலேயே அமையும். அணிகளில் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவது அவர்களுக்கு உதவாது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

  First published: