முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிரதமர் மோடியை இப்போது திமுக வரவேற்பது ஏன்?.. திமுக எம்.பி கனிமொழி விளக்கம்

பிரதமர் மோடியை இப்போது திமுக வரவேற்பது ஏன்?.. திமுக எம்.பி கனிமொழி விளக்கம்

கனிமொழி

கனிமொழி

மாநிலத்தில் வந்து திட்டங்களை துவங்கி வைக்கும் பிரதமரை எந்த அரசாங்கமும் வேண்டாம் எனக் கூறாது - கனிமொழி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிரதமர் மோடியை இப்போது தி.மு.க வரவேற்பது ஏன் என்பது குறித்து திமுக எம்.பி கனிமொழி விளக்கமளித்துள்ளார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போது எதிர்த்த திமுக, பலூன்களில் GOBackModi  என பறக்க விட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்தது. தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி GOBack என்ற பலூன்களை பறக்கவிட்டும் கருப்புச்சட்டை அணிந்து திமுக எதிர்த்து வந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி மக்கள் நலத் திட்டங்களை துவங்கி வைக்க தமிழகம் வருகிறார். அதிமுக ஆட்சியின் போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக பிரதமர் வருகையை எதிரத்தது. இப்போது திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் மோடியின் வருகையை எதிர்த்து குரல்கள் எழவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பதிலளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைக்க தமிழகம் வருகிறார். இதனை திமுக அரசு எதிர்க்கவில்லை. அதிமுக ஆட்சியில் பிரதமர் மோடி தமிழகம் வந்த போது திமுக எதிர்த்தது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். மாநிலத்தில் வந்து திட்டங்களை துவங்கி வைக்கும் பிரதமரை எந்த அரசாங்கமும் வேண்டாம் எனக் கூறாது. இங்கு நமக்கு திட்டங்களின் தேவைக்கு இருக்கு. அரசு என்பது வேறு, கருத்தியல் என்பது வேறு என பதிலளித்துள்ளார்.

Also Read: ராணி வேலுநாச்சியாரின் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி

கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் இருந்தாலும். ஒரு அரசு எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் மக்களுக்கு எது நல்லது என்பதை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  மத்திய அரசின் அனைத்து செயல்பாடுகளையும், சட்டங்களையும், கடந்த அதிமுக அரசு ஆதரித்தது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், குடியுரிமை சட்டங்கள் போன்ற மத்திய அரசு கொண்டு வந்த  மக்களுக்கு எதிரான சட்டங்களை அதிமுக ஆதரித்தது. திராவிட முன்னேற்ற கழகம் அதனை எதிர்த்தது. எனவே இந்த விவகாரத்தில் திமுக  - அதிமுக ஆட்சியை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

First published:

Tags: DMK, Kanimozhi, MK Stalin, Modi, Tamil News