‘பதவி வெறியில் பழனிச்சாமி’ - கனிமொழி காட்டமான விமர்சனம்

‘பதவி வெறியில் பழனிச்சாமி’ - கனிமொழி காட்டமான விமர்சனம்

கனிமொழி

தமிழகத்தையே கூறுபோட்டு விற்றாலும் எஞ்சியுள்ள மூன்று மாத ஆட்சியை விட்டு விடக்கூடாது என்ற பதவி வெறியில் தமிழக முதல்வர் பழனிச்சாமி உள்ளதாக தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறினார்.

 • Share this:
  ‘தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சங்கரன்கோயில், கடையநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பிரச்சார பயணம் மேற்கொண்டார்.

  அப்போது, கடையநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது, ‘சிறுபான்மையினருக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை இயற்றி வருகிறது ஆனால் இவைகளை எதிர்த்து குரல் கொடுக்க தைரியம் இல்லாத அரசாக அதிமுக செயல்பட்டு வருகிறது.
  தமிழகத்தையே கூறுபோட்டு விற்றாலும் எஞ்சியுள்ள மூன்று மாத ஆட்சியையும் விடக்கூடாது என்ற பதவி வெறியில் பழனிச்சாமி உள்ளார்.

  மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வர் அறிக்கை நாயகன் என்று கூறி வருகிறார் எனவும் அதில் எங்களுக்கு பெருமை எனவும் ஏனென்றால் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவதால்தான் ஒன்று இரண்டு நல்ல திட்டங்களும் தமிழகத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருவதாக’ தெரிவித்தார்.

  மேலும்,  ‘தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் வெறும் அடிக்கல் மட்டும் நாட்டி அடிக்கல் நாயகனாக தமிழக முதல்வர் திகழ்கிறார். அந்த வகையில் முதல்வர் பழனிச்சாமி தமிழகத்திற்கு வந்த கோளாறு’  என விமர்சித்து பேசினார்.  மேலும், திமுக ஆட்சிக்கு வந்த உடன் இந்த மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் அணை, கருப்பா நதி அணை, குண்டாறு அணை, கடனாநதி அணை ராமநதி அணைகள் விவசாயிகளின் நலன் கருதி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதே போல் மருத்துவ கல்லூரி, கலை கல்லூரிகள் அமைக்கபடும் எனவும் தெரிவித்தார். எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்க்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயளாளர், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: