நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தான் போட்டியிடப்போகும் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட முத்தையாபுரத்தில் கனிமொழி பிரசாரத்தைத் துவங்கினார்.
நேற்று திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இன்று முதல் இரண்டு கட்சிகளும் பிரசாரத்தைத் துவங்கியுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் தனது முதல் பிரசாரத்தைத் துவங்கினார்.
அதேபோல் திமுக கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தேர்தல் சார்பாக, தூத்துக்குடி, ஒட்டப்பிடாரத்தில் கனிமொழி தனது பிரசாரத்தைத் துவங்கினார்.
பிரசாரத்தில் அவர் பேசியபோது, ”இந்தத் தேர்தல் போராட்டக்களத்தில் அதிமுகவோ பாஜகவோ வெற்றி பெற்று விபத்து ஏற்பட்டால் ஜனநாயகம் இல்லாத சூழல் ஏற்படும். நீட் தேர்வைக் கொண்டு வந்த அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறியுள்ளது நகைச்சுவைக்கு உரியது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் போது உயிரிழந்த 13 பேரின் உயிரிழப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றால் தமிழக முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும். தேர்தலில் போட்டியிடும் எனக்கு நல் ஆதரவை வழங்க வேண்டும்’’ எனக் கூறினார்.
அதேபோல், அதிமுகவும் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிலையில் இன்று தனது பிரசாரத்தைத் துவங்கியது. சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தேனியில் பன்னீர் செல்வமும் தனது பிரசாரத்தைத் துவங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.