ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பெண்கள் குறித்து இழிவாக பேசிய திமுகவினர்... குஷ்பூ முறையீடு... மன்னிப்புக் கேட்ட கனிமொழி

பெண்கள் குறித்து இழிவாக பேசிய திமுகவினர்... குஷ்பூ முறையீடு... மன்னிப்புக் கேட்ட கனிமொழி

கனிமொழி வருத்தம்

கனிமொழி வருத்தம்

ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்- கனிமொழி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திமுக நிர்வாகி ஒருவர் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  இதற்கு குஷ்பு  கண்டனம் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், இச்சம்பவத்திற்கு திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வருத்தம் தெரிவித்துள்ளார்.

  திமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பொதுமேடையில் பெண்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், நடிகை குஷ்பு இது தொடர்பாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

  ட்விட்டரில் அவர், ஆண்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்தால், அது அவர்கள் வளர்த்த விதமான வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அத்தகைய ஆண்கள் தங்களை #கலைஞரின் பின்பற்றுபவர்கள் என்று அழைக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிடமா” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கனிமொழியையும் அவர் டேக் செய்திருந்தார்.

  இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ள கனிமொழி,  ‘ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. திமுக இதை பொறுத்துக்கொள்ளாது. எனது தலைவர் ஸ்டாலினின் காரணமாக இச்சம்பவத்திற்கு என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கோர முடியும்’ என பதிவிட்டுள்ளார்.

  இந்நிலையில்,  வருத்தம் தெரிவித்த கனிமொழிக்கு குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும் ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள்  பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்” என பாராட்டியுள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Kanimozhi, Khushbu