வருமான வரித்துறை சோதனை ஏன்? கனிமொழி விளக்கம்

தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர்.

news18
Updated: April 17, 2019, 9:06 AM IST
வருமான வரித்துறை சோதனை ஏன்? கனிமொழி விளக்கம்
கனிமொழி தங்கியிருக்கும் வீடு
news18
Updated: April 17, 2019, 9:06 AM IST
தூத்துக்குடியில் தேர்தலை நிறுத்தக் கூறிய சதியின் ஒரு பகுதியாகத்தான் எனது வீட்டில் சோதனை செய்துள்ளனர் என்று தி.மு.க வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர். கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ‘8.30 மணி அளவில் வருமான வரித்துறையினர் எனது வீட்டுக்கு வந்தனர். வருமான வரித்துறையினர் சோதனை செய்ய வந்தபோது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டேன். இந்த நேரத்தில் சோதனை செய்யலாமா? என்று கேட்டதற்கு அவர்களிடம் பதில் இல்லை. சோதனை நடத்திய இடத்திலேயே எனக்கு சம்மன் கொடுத்தார்கள்.

அது, சட்டத்துக்கு புறம்பானது. இந்தச் சோதனையில் இங்கிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதனை, அவர்களே ஒப்புக்கொண்டார்கள். இந்தத் தொகுதியில் எப்படியாவது தேர்தலை நிறுத்திவிடலாம் என்ற ஆசையில்தான் இங்கே சோதனை செய்யவந்தனர். அவர்களது, ஆசை நிராசையாக போனது.

இந்தச் சோதனையால், தி.மு.க தொண்டர்கள் அச்சப்படமாட்டார்கள். இனிமேல், தான் தொண்டர்கள் உத்வேகமாக செயல்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Loading...Also see:

First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...