• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காஞ்சிபுரம்: கழிவுநீர் தொட்டியில் இறங்கியபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு -தொடரும் அவலம்

காஞ்சிபுரம்: கழிவுநீர் தொட்டியில் இறங்கியபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு -தொடரும் அவலம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் இறங்கியபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை கிராமத்தில் செயல்படும் சாயக்கழிவு தொழிற்சாலையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் லட்சுமணன், சுனில் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

    Also read: ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் - எஸ்.பி.பிக்காக பிரபலங்கள் பிரார்த்தனை

    லட்சுமணன் தொட்டியில் இறங்க முயன்றபோது விஷ வாயு தாக்கி மயங்கி உள்ளே விழுந்தார். காப்பாற்ற முயன்ற சுனிலும் மயங்கி விழுந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: