• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அத்திவரதரை தரிசித்த 3 என்கவுண்டர்களில் இருந்து தப்பித்த ரவுடி... வி.வி.ஐ.பி பாஸ் கொடுத்தது யார்...?

அத்திவரதரை தரிசித்த 3 என்கவுண்டர்களில் இருந்து தப்பித்த ரவுடி... வி.வி.ஐ.பி பாஸ் கொடுத்தது யார்...?

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம்

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு இந்து அறநிலை துறை சார்பாக எவ்வாறு மரியாதை வழங்கப்பட்டதோ அதே இடத்தில் ரவுடி வரிச்சியூர் செல்வம் அமர்ந்து சாமி தரிசனம் செய்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வரிச்சியூர் செல்வம் வி.வி.ஐ.பி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் மீது தமிழகம் முழுவதும் பல வழக்குகள் உள்ளன. இவர் 3 முறை என்கவுன்டரிலிருந்து கடைசி நேரத்தில் தப்பித்தவர். தற்போது குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை திருந்தி வாழ்கிறேன் என்று வரிச்சியூர் செல்வம் சொல்லி வந்தாலும் மறைமுகமாக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

சமீபத்தில் சர்வதேச மனித உரிமை அமைப்பில் நிர்வாகியாக இருந்து வந்தார். அதன் பின்னர் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு நடித்தும் வந்தார்.

பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த பிரபல தாதா வரிச்சியூர் செல்வம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைப்பவ திருவிழாவில் வி.வி.ஐ.பி வரிசையில் சென்று கலந்துக்கொண்டார். அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விவிஐபி பாஸில் அத்திவரதரை தரிசனம் செய்த ரவுடி வரிச்சியூர் செல்வம்


குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு இந்து அறநிலையத்துறை சார்பாக எவ்வாறு மரியாதை வழங்கப்பட்டதோ அதே இடத்தில் வரிச்சியூர் செல்வம் அமர்ந்து சாமி தரிசனம் செய்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... 17-வது நாளான இன்று மாம்பழ நிற பட்டு உடுத்தி செண்பகப் பூ மாலையுடன் காட்சியளிக்கும் அத்திவரதர்!





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: