• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குடிமகன்கள் அமர நாற்காலி... ₹ 25 லட்சம் மதிப்புள்ள சரக்குகள் விற்பனைக்காக...! தயாரான காஞ்சிபுரம் டாஸ்மாக் கடைகள்

குடிமகன்கள் அமர நாற்காலி... ₹ 25 லட்சம் மதிப்புள்ள சரக்குகள் விற்பனைக்காக...! தயாரான காஞ்சிபுரம் டாஸ்மாக் கடைகள்

வரிசையில் நிற்கும் குடிமகன்கள்

வரிசையில் நிற்கும் குடிமகன்கள்

காலை 10 மணி முதல் அரசு மதுபான கடைகளில் விற்பனை துவங்க உள்ள நிலையில் ஒவ்வொரு கடையிலும் 25 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு மதுபான கடைகளை இன்று காலை 10 மணி முதல் பிறக்கலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு தனிமை படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர மாவட்டத்தில் 16 அரசு மதுபான கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 16 கடைகளிலும் சமூக இடைவெளியுடன் மதுபான பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கிச் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டு போலீசார் பாதுகாப்புடன் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    காஞ்சிபுரம் வெள்ளைகுளம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளில் வரும் வயதான பொதுமக்களுக்கு அமர நாற்காலி போடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் வியப்பில் ஆழ்த்தியது.

    காலை 10 மணி முதல் அரசு மதுபான கடைகளில் விற்பனை துவங்க உள்ள நிலையில் ஒவ்வொரு கடையிலும் 25 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மதுபானம் வாங்க வருபவர்கள் உள்ளூர் மக்களாகவும் அதற்குண்டான அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என அறிவித்துள்ள நிலையில் ஒவ்வொரு மதுபான பிரியர்களுக்கும் 4 மது பாட்டில்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உள்ளூர் மக்களை தவிர சென்னை ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த யாராவது மதுபானம் வாங்க வந்தால் அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    படிக்க: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை விபரங்கள் வெளியீடு - முழு பட்டியல்








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: