கடந்த 2008-ம் ஆண்டில் மறு சீரமைப்பின்போது செங்கல்பட்டாக அதுவரையில் இருந்துவந்தத் தொகுதி காஞ்சிபுரம் தொகுதியாக உருமாறியது.
1951-ம் ஆண்டு செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டு 2004-ம் ஆண்டு வரையிலான 14-வது மக்களவைத் தேர்தல் வரையில் காங்கிரஸ், சுயேச்சை, தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க என அனைத்துக் கட்சிகளும் மாறி மாறி வெற்றி பெற்றுவரும் தொகுதியாக விளங்கியது.
பின்னர், 2008-ம் ஆண்டில் நடைபெற்ற மறு சீரமைப்பின்போது, செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற 15-வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி. விஸ்வநாதன் வெற்றி பெற்றார்.
பின்னர், 2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல் 4,99,395 வாக்குகள் பெற்று காஞ்சிபுரத்தில் மீண்டும் அ.தி.மு.க-வின் கொடியை நாட்டினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் ஜி.செல்வம் 3,52,529 வாக்குகள் பெற்று சுமார் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
ம.தி.மு.க-வின் மல்லை சத்யா 2,07,080 வாக்குகளை அள்ளி தி.மு.க-வின் வெற்றிக்குக் கடந்த மக்களவைத் தேர்தலில் தடையாக மாறியிருந்தார். காங்கிரஸ் கட்சியின் விஸ்வநாதன் வெறும் 33,313 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்தார்.
Published by:Rahini M
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.