காஞ்சி அத்திவரதர்: மக்களின் பாராட்டுகளுடன் விடைபெற்ற துப்புரவுத் தொழிலாளர்கள்!

48 நாட்களில் சேகரிக்கப்பட்ட 1200 டன் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் மற்றும் பயோ கேஸ் தயாரிக்கிறது மாவட்ட நிர்வாகம்.

news18
Updated: August 20, 2019, 10:55 AM IST
காஞ்சி அத்திவரதர்: மக்களின் பாராட்டுகளுடன் விடைபெற்ற துப்புரவுத் தொழிலாளர்கள்!
துப்புரவு தொழிலாளர்கள்
news18
Updated: August 20, 2019, 10:55 AM IST
காஞ்சி அத்திவரதர் வைபவத்திற்காக வந்திருந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மக்களின் பாராட்டுகளுடன் விடைபெற்றுள்ளனர்.

தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய வைபவம் எனக் கூறும் வகையில் அத்திவரதரை தரிசிக்க ஒரு கோடிக்கும் அதிகமானோர் காஞ்சியில் குவிந்தனர். வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்ததால் காஞ்சி நகரமே திக்கு முக்காடியது.

லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த காஞ்சியில் மலை போல் குவிந்த குப்பைகளையும், கழிவுகளையும் சுத்தம் செய்ய காஞ்சி நகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி திருவள்ளூர், கடலூர், திருவாரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 நகராட்சி ஆணையர்கள், 1,700 தொழிலாளர்கள் என 2,000 பேர் கொண்ட பெரும் படையே களமிறங்கியது.
அல்லும், பகலும் கைவிரல் தேய உற்சாகம் குறையாமல் குப்பைகளை அள்ளி நகரை தூய்மையாக வைத்திருந்த இவர்கள், மக்களின் மனம் நிறைந்த பாராட்டுதல்களுடன் பிரியாவிடை பெற்றனர்.

சாக்கடையை சுத்தம் செய்வது, குப்பை அள்ளுவது என குறுகிய நேரத்தில் மலை போல் எழும் சவால்களை பாங்குடன் சமாளித்ததால் பாராட்டுதல்களையும் அள்ளிச்சென்றுள்ளனர் இந்த துப்புரவாளர்கள். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினார்.

Loading...

48 நாட்களில் 1200 டன் குப்பையை இந்த பணியாளர்கள் அள்ளியிருக்கிறார்கள். அள்ளப்படும் குப்பை சின்ன காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தம்பேட்டை திடக்கழிவு மேலாண்மை கூடத்தில் கொட்டப்பட்டுள்ளது. அங்கு மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரித்து அதிலிருந்து உரம் தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது. பயோ கேஸ் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

பக்தர்கள் விட்டுப்போன காலனிகளை ஆதரவற்ற இல்லங்ளுக்கு அனுப்புகிறது மாவட்ட நிர்வாகம், மீதமிருக்கும் காலனிகள் ஏலம் விடப்படுகிறது.

Also see...

First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...