காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் மர்ம நபர்களால் ஒருவர் ஓட ஓட அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் ஓரிக்கை கணேஷ் நகர் பகுதியில் வசித்துவரும் ராமதாஸ் என்பவரின் மகன் மோகன் (வயது 25). ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது நண்பர் பாலாஜி என்பவருடன் வெளியில் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். மோகன் தனது நண்பர் பாலாஜியுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு வீடு திரும்பியுள்ளார். இருவரும் மிலிட்டரி ரோடு சத்யா அருகே வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் இருவரையும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் இருவரும் படுகாயங்களுடன் இருந்துள்ளனர்.இதனை பார்த்த காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மோகனை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடலானது உடற்கூறு ஆய்வுக்காக பிரேத பரிசோதனை கூடத்திற்கு வைப்பி வைக்கப்பட்டது.மேலும் உடன் இருந்த அன்னை சத்யா நகரை சேர்ந்த பாலாஜிக்கு தலை மற்றும் காதுகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சகிச்சை பரிவில் சகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் சம்பவ இடத்தினை நேரில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள பாலாஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாலுகா காவல்துறையினர் பூபாலன்,மணிகண்டன் இருவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: சந்திரசேகர் ( காஞ்சிபுரம்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.