என்னம்மா இப்படி பண்றீங்களேமா.. சூப்பர் மார்க்கெட்டில் கைவரிசை காட்டிய இளம்பெண்

சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண்

சூப்பர் மார்க்கெட்டில் ஆடைக்குள் மறைத்து பொருள்களை திருடிச்சென்ற பெண்ணை போலீஸா தேடி வருகின்றனர்.

 • Share this:
  சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை ஆடைக்குள் மறைத்து திருடும் இளம் பெண்ணிற்கு போலீஸ் வலைவீச்சு

  காஞ்சிபுரம் சாலை தெரு பகுதியில் அமைந்திருக்கும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் இளம்பெண் ஒருவர் பொருட்கள் வாங்குவது போல் வந்துள்ளார். வெகுநேரமாக பொருட்களை வாங்குவது போல் அங்கு இங்கேயும் அலைபாய்ந்து கொண்டிருந்தார். கடையின் உள் பகுதியில் உள்ள ஒரு பகுதியில் பொருட்களை திருடி, தனது ஆடைக்குள் மறைத்து வைத்து எடுத்து சென்றுள்ளார்.

  Also Read:  ஆப்பாயில் தர தாமதமானதால் மதுபோதையில் ஹோட்டலை அடித்து உடைத்த காவலர்கள் பணியிடை நீக்கம்

  அந்தப் பெண் பொருட்களை திருடிச் சென்ற பிறகு கடையில் பல பொருட்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிசிடிவி கேமராக்களை பரிசோதித்து பார்த்தபோது, அந்த பெண் பொருட்களை எடுத்து ஆடைக்குள் மறைத்து வைக்கும் காட்சிகள் அதில் பதிவாகி உள்ளது.

  Also Read: கொரோனாவால் அரசுப் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.. ஹெட்மாஸ்டருக்கு டோஸ் விட்ட கலெக்டர்

  இதுதொடர்பாக கடை உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பொருட்கள்  திருடிச்சென்ற பெண்ணை தேடிவருகிறார்கள்.

  செய்தியாளர்: சந்திரசேகர் ( காஞ்சிபுரம்)

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Ramprasath H
  First published: