Home /News /tamil-nadu /

ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்

ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்

ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்

ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்

திரைப்பட நடிகர் விஜயின் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.பி.கே.தென்னரசு ஏற்பாட்டின் பேரில் விலையில்லா உணவகத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
    நாள் தோறும் காலை வேளையில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்.

    திரைப்பட நடிகர் விஜயின் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்.பி.கே.தென்னரசு ஏற்பாட்டின் பேரில் விலையில்லா உணவகத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

    நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு விலையில்லா உணவகத்தின் மூலம் காலை வேளைகளில் உணவு தயாரித்து காஞ்சிபுரம் நகர பகுதி சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்றோருக்கும், ஏழை எளிய தொழிலாளர்களுக்கும் அவர்களின் இடத்திற்கு தேடி சென்று உணவு, குடிநீர் வழங்கி , உண்ண வைத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆனந்தம் அடைந்து வருகின்றனர்.

    Also read... பெயரை மாற்றியாவது தாலிக்கு தங்கம் கொடுங்க - பிரேமலதா விஜயகாந்த்

    விஜய்மக்கள் இயக்கத்தினர் செய்யும் விலையில்லா உணவு வழங்கும் பணிக்கு உணவை வாங்கி உண்ணும் ஆதரவற்றவர்களும், பொதுமக்களும் நன்றி கூறி பாராட்டி வருகின்றனர்.

    செய்தியாளர்: சந்திரசேகர், காஞ்சிபுரம்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Kanchipuram, Vijay makkal iyakkam

    அடுத்த செய்தி