நடிகர் விவேக்கின் கனவை நனவாக்க விஜய் ரசிகர்கள் எடுத்த சபதம்

மரக்கன்று நடும் விஜய் ரசிகர்கள்

மறைந்த நடிகர் விவேக்கின் கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

  • Share this:
கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 59. விவேக்கின் மரணம் திரைத்துறையினரிடம் மட்டுமல்லாது மக்கள் அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

திரைப்பட நடிகர் என்பதைத் தாண்டி மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரில் க்ரீன் கலாம் என்ற அமைப்பை உருவாக்கி சுமார் 33 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு வைத்த விவேக் தனது 1 கோடி மரக்கன்றுகள் நடும் கனவை எட்டிப்பிடிக்கும் முன் இந்த உலகை விட்டு மறைந்தார்.

அவர் இறுதிச்சடங்கில் கூட ஏராளமான ரசிகர்கள் கைகளில் மரக்கன்றுகளுடன் கலந்து கொண்டனர். இந்நிலையில் விவேக்கின் 1 கோடி மரங்கள் நடும் கனவை நனவாக்க மறைமலைநகர் நகராட்சியில் 1 லட்சம் மரம் நடுவதற்கு காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணியினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.விரைவில் தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நடிகர் விவேக் அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் மரக்கன்று நடும் விழா நடத்த திட்டமிட்டுள்ளனர் நடிகர் விஜய் விவேக்கிற்கு உள்ள நட்பை வெளிப்படுத்தும் விதமாக விஜய் ரசிகர்கள் இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளனர் இது அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பு பெற்றுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: