Home /News /tamil-nadu /

பத்திரப்பதிவு செய்ய ரூ.20ஆயிரம் லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய இணை சார்பதிவாளர் - உடந்தையாக இருந்த தரகரும் கைது

பத்திரப்பதிவு செய்ய ரூ.20ஆயிரம் லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய இணை சார்பதிவாளர் - உடந்தையாக இருந்த தரகரும் கைது

இணை சார்பதிவாளர் கைது

இணை சார்பதிவாளர் கைது

இணை சார்பதிவாளர் சீனிவாசன் பத்திரப்பதிவு செய்வதற்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.

    காஞ்சிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இணை சார்பதிவாளர் கைது.

    காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பல்வேறு வகையான பத்திர பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காஞ்சிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் 10 போலீஸார் கொண்ட குழுவினர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது இணை சார்பதிவாளர் சீனிவாசன் பத்திரப்பதிவு செய்வதற்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். மேலும் இதற்கு உதவியாக இருந்த தரகர் பன்னீர்செல்வம் என்பவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். 20 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இணைப்பதிவாளர் சீனிவாசன் மற்றும் தரகர் பன்னீர்செல்வம் இருவரையும் கைது செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    செய்தியாளர்: சந்திரசேகர் 



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Bribe, Crime | குற்றச் செய்திகள், Kancheepuram

    அடுத்த செய்தி