Home /News /tamil-nadu /

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென நீண்ட நேரம் பனிமூட்டம்

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென நீண்ட நேரம் பனிமூட்டம்

பனிமூட்டம்

பனிமூட்டம்

காஞ்சிபுரத்தில் பகலில் வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், காலையில் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. 

  • News18
  • Last Updated :
    காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை நீண்ட நேரம் பனிமூட்டம் நிலவியதால், சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன.

    காஞ்சிபுரத்தில் பகலில் வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், காலையில் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டம் சூழ்ந்திருந்தது.

    சாலையோரத்தில் இருக்கும் மரங்கள், ஆற்றுப் பாலங்கள், ரயில்வே பாலம் உள்ளிட்டவை தெளிவாக கண்ணுக்குத் தெரியாததால், பேருந்து, லாரிகள், வேன்கள், இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மெதுவாகச் செல்ல நேரிட்டது.

    Also read... குற்றவாளியை நீதிமன்றத்திற்கு கூட்டிச் செல்லும் வழியில் ஓய்வெடுத்த போலீசார் - கைவிலங்குடன் கைதி தப்பியோட்டம்

    காலை 7 மணிக்குப் பின்னர், படிப்படியாக பனி மூட்டம் குறைந்தது. குறிப்பாக கைலாசநாதர் கோவில் பனியால் போர்த்தப்பட்டு ரம்மியமாக காட்சியளித்தது.

    -செய்தியாளர்: சந்திரசேகர்
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Kanchipuram

    அடுத்த செய்தி