Home /News /tamil-nadu /

லாரி மோதியதில் குழந்தையோடு பெண் காவலர் உயிரிழந்த பரிதாபம்

லாரி மோதியதில் குழந்தையோடு பெண் காவலர் உயிரிழந்த பரிதாபம்

உயிரிழந்த பெண் காவலர்

உயிரிழந்த பெண் காவலர்

Kanchipuram District | சாலை விபத்தில் பெண் காவலரும் அவரது குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் பெண் காவலர், குழந்தையுடன் பலியான சம்பவம் சக காவலர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த உமாதேவி(வயது 26). இவர் நேற்றிரவு பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு கணவர் ராஜா மற்றும் மகன் தக்ஷூத்-வுடன் பனப்பாக்கம் நோக்கி சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று இரண்டு கார்களை மோதி முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில் காவலர் உமாதேவி மற்றும் அவரது இரண்டு வயது மகன் தக்ஷூத் இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

    ALSO READ |  தமிழ்நாட்டு ரேஷன் கடைகளில் இருந்து அகற்ற பட்ட இந்திய பிரதமர் மோடியின் படம் 

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலுசெட்டி காவல்துறையினர் காயமடைந்த ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிரிழந்தவர்களின் இரு பிரேதங்களையும் கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த பாலுசெட்டி காவல்துறையினர் லாரியை கைபற்றி தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். சாலை விபத்தில் பெண் காவலரும் அவரது குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் : சந்திரசேகர் ராமச்சந்திரன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Kanchipuram

    அடுத்த செய்தி