காசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்க வேண்டும்: அமைச்சர் எல்.முருகனிடம் விஜயேந்திரர் வேண்டுகோள்!

காசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்க வேண்டும்: மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் விஜயேந்திரர் வேண்டுகோள்!

காசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் விஜயேந்திரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 • Share this:
  காஞ்சிபுரம் அருகேயுள்ள ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள மகா பெரியவர் மணி மண்டபத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சதூர்மாஸ்ய விரதத்தை கடைபிடித்து வருகிறார்.

  சாதுர்மாஸ்ய விரதத்தை கடைபிடித்து வரும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சந்தித்து ஆசி பெற்று வருகின்றனர்.

  அந்தவகையில், காஞ்சிபுரம் வருகை தந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

  மத்திய அமைச்சருக்கு ஆசி வழங்கிய சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மக்களுக்கு பல்வேறு துறைகளின் மூலமாக சேவை செய்யவும் அதிகமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை  நல்லமுறையில் பயன்படுத்தி எல்.முருகன் மக்களுக்கு சேவையாற்றிட வேண்டும் என்று கூறி ஆசி வழங்கினார்.

  மேலும் காசியிலிருந்து, காஞ்சிபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் கேட்டுக்கொண்டார்.

  Also read: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை ஏன் - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

  முன்னதாக ஓரிக்கை மணி மண்டபத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார், காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் மேலாளர் என்.சுந்தரேச ஐயர் மாலை அணிவித்து வரவேற்றார்.

  அமைச்சருடன் பாஜக மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு, துணைத் தலைவர் ஓம்.சக்தி பெருமாள், மாவட்ட பொதுச் செயலாளர் கூரம் விஸ்வநாதன், அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்க மாநிலத்துணைத் தலைவர் டி.கணேஷ், காஞ்சிபுரம் நகர் பொதுச்செயலாளர் காஞ்சி.வி.ஜீவானந்தம் உட்பட பாஜக நிர்வாகிகள் பலரும் உடன் வந்திருந்தனர்.

  செய்தியாளர் - சந்திரசேகர் ராமச்சந்திரன்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: