காஞ்சி பட்டு முதல் சந்தேரி வரை - நீங்கள் விரும்பி வாங்கும் பட்டுப் புடவை ரகங்கள் எந்தெந்த ஊர்களிலிருந்து வருகிறது தெரியுமா..?

காஞ்சி பட்டு முதல் சந்தேரி வரை - நீங்கள் விரும்பி வாங்கும் பட்டுப் புடவை ரகங்கள் எந்தெந்த ஊர்களிலிருந்து வருகிறது தெரியுமா..?

கலாச்சாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் பெயர் பெற்ற இந்தியாவில் பட்டுப்புடவைகளுக்கு என்று தனி மவுசு உண்டு. உலகளவில் பட்டுப்புடவைகள் தயாரிப்பில் 2 வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் பல்வேறு ரக பட்டுப்புடவைகள் உள்ளன. உடைகளில் நவீன வளர்ச்சியை எட்டியிருக்கும் இப்போது கூட பெண்களுக்கு பட்டு புடவைகள் மீது அலாதி பிரியம் உண்டு. இந்நிலையில், மன்னர் காலத்தில் இருந்து மவுசு குறையாமல் இருக்கும் இந்திய பட்டுப்புடவைகளின் ரகங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

உலகளவில் பட்டுப்புடவைகள் தயாரிப்பில் 2 வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் பல்வேறு ரக பட்டுப்புடவைகள் உள்ளன.

  • Share this:
    கலாச்சாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் பெயர் பெற்ற இந்தியாவில் பட்டுப்புடவைகளுக்கு என்று தனி மவுசு உண்டு. உலகளவில் பட்டுப்புடவைகள் தயாரிப்பில் 2 வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் பல்வேறு ரக பட்டுப்புடவைகள் உள்ளன. உடைகளில் நவீன வளர்ச்சியை எட்டியிருக்கும் இப்போது கூட பெண்களுக்கு பட்டு புடவைகள் மீது அலாதி பிரியம் உண்டு. இந்நிலையில், மன்னர் காலத்தில் இருந்து மவுசு குறையாமல் இருக்கும் இந்திய பட்டுப்புடவைகளின் ரகங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    சந்தேரி பட்டு, மத்தியபிரதேசம் : இந்தியாவில் இருக்கும் பாரம்பரிய பட்டு புடவைகள் பெரும்பாலும், அவை தயாரிக்கப்படும் நகரத்தின் பெயரைக் கொண்டே அடையாளப்படுத்தப்படுகின்றன. சந்தேரியும் மத்திய பிரதேசத்தில் இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இருந்து சந்தேரியில் கைத்தறி நெசவு செய்யப்பட்டு வருகிறது. முகலாயர் காலத்தில் இந்த பட்டின் புகழ் மிகப்பெரிய உச்சத்தை தொட்டது. மோட்டிஃப்கள் பட்டு நூல் ஜரிகை அல்லது வண்ண நூல் ஜரிகையால் நெசவு செய்யப்படுவது தனி அடையாளமாக உள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் சந்தேரி நெசவு கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவானதாகும். காலப்போக்கில் சந்தேரி நெசவு பட்டுப்புடவைகள் தயாரிக்கும் கைத்தறி நெசவு வீழ்ச்சியை சந்தித்ததால், அதனை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் சந்தேரியன் அமைப்பு செயல்பட்டு வருகிறது.


    மணியாபந்தா, ஒடிசா : ஒடிசா தலைநகரான புவனேஸ்வர் மற்றும் கட்டாக் நகரங்களுக்கு அருகே மணியாபந்தா நகரம் அமைந்துள்ளது. நெசவுத் தொழிலுக்கு பெயர்பெற்ற இந்த நகரத்தில் பழங்காலத்தில் இருந்து ஒற்றை இகாட் நெசவு கலையில் ஈடுபட்டு வருகின்றனர். மணியாபந்த் இகாட் அல்லது கந்துவா என இந்த பட்டு அழைக்கப்படுகிறது. ஒடிசாவின் மற்ற பட்டு ரகங்களில் இருந்து வேறுபடும் மணியாபந்த், டஸ்லர் பட்டுகளுடன் இணைந்து தயாரிக்கப்படுகின்றன. புத்தர்கள் வாழ்விடமாக மாறிய மணியாபந்தில் செய்யபட்டும் பட்டுகளில், புத்த மதத்தின் சாயல்களையும் அறியலாம்.


    காஞ்சிபுரம் பட்டு, தமிழ்நாடு : பல்லவ சாம்ராஜ்ஜியத்தில் தலைச்சிறந்த நகரமாக விளங்கிய காஞ்சிபுரம், பாரம்பரியமிக்க பட்டுப்புடவைகளுக்கும் பெயர்பெற்றது, தூய மல்பரி பட்டுநூலில் இருந்து பட்டுப்புடவைகள் தயாரிக்கப்படுவது, இந்தப் பட்டுப்புடவைகளின் தனிச்சிறப்பாகும். தமிழர் திருமணங்களில் தவிர்க்க முடியாத பாரம்பரிய பட்டாக காஞ்சீபுரம் பட்டுப்புடவைகள் உள்ளன. கோயில் நகரமாகவும் இருப்பதால், காஞ்சிபுரத்துக்கு உள்நாடு, வெளிநாடு என ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். அங்கு சென்றதன் நினைவாக காஞ்சீபுரம் பட்டுப்புடவைகளையும் வாங்கிச் செல்கின்றனர்.


    பனாரஸ் பட்டு, வாரணாசி : உலகப் புகழ்பெற்ற பனாரஸ் பட்டு இங்குதான் தயாரிக்கப்படுகிறது. இந்த நகரத்தில் கைத்தறி நெசவு மூலம் பட்டு தயாரிக்கப்படுகிறது. ஒரு பட்டு தயாரிக்க ஏறக்குறைய 6 மாதங்கள் ஆகும். இதன் காரணமாக இந்த பட்டினை அணிவதற்கு உலகம் முழுவதும் ஏராளமானோர் விரும்புகின்றனர். காலப்போக்கில் இந்த பட்டு தயாரிப்பு குறைந்துவிட்டதால், மீண்டும் உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்தப் பட்டுக்கு, இந்திய அரசின் முத்திரையும் கொடுக்கப்பட்டுள்ளது.


    பைதானி, மகாராஷ்டிரா : மகாராஷ்டிர மாநிலம் பைதானி நகரத்தில் தயாரிக்கப்படும் பைதானி ரக சேலைகளும், இந்திய பாரம்பரிய சேலைகளுள் ஒன்றாகும். காஞ்சிபுரம் பட்டுக்கு மேலான மதிப்பை பெற்றிருந்த பைதானி பட்டுகள், 3 ஆம் நூற்றாண்டில் பைதான் நகரத்தில் கைத்தறி நெசவு மூலம் தயாரிக்கப்பட்டு ரோம் நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. தங்க நூல்களைக் கொண்ட வேலைப்பாடுகள் இருப்பதால் மிகவும் காஸ்ட்லியான புடவையாக பார்க்கப்பட்டது. ரோமானியர்கள் தங்கத்துக்கு இணையாக இந்தப் புடவைகளை எண்ணினர். சாதவாகனர் காலத்தில் புதிய உச்சத்தைத் தொட்ட பைதானி புடவைகள் சாமானியர்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது. காலப்போக்கில் வெள்ளி ஜரிகை நூல் மூலம் பைத்தானி புடவைகள் தயாரிக்கப்பட்டதால், சாமானியர்களும் வாங்கும் விலையில் கிடைத்தது.


     

     
    Published by:Sivaranjani E
    First published: