Home /News /tamil-nadu /

விஜயபாஸ்கர் உதவியாளர் இல்லத்தில் 8 மணிநேரம் நடந்த சோதனை நிறைவு - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

விஜயபாஸ்கர் உதவியாளர் இல்லத்தில் 8 மணிநேரம் நடந்த சோதனை நிறைவு - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள்

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்  உதவியாளர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை 8 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு.

    தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பணமும், சொத்து குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின

    இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்து வருகிறது. புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள்

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் விஜயபாஸ்கரின் முன்னாள் உதவியாளர் அஜய்குமார் என்பவர் இல்லத்தில் 6:45 மணியிலிருந்து எட்டு பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அஜய்குமார் தேவர் இயக்கம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

    மேலும் அஜய் குமார் என்பவருக்கு சொந்தமாக தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இல்லத்தில் சோதனை நடைபெற்றது. காலையில் தொடங்கி பிற்பகல் 2.45 மணியளவில் நிறைவடைந்தது. சுமார் 8 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

    செய்தியாளர்: சந்திரசேகர் (காஞ்சிபுரம்)

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, Politics, Tamilnadu, Vijayabaskar

    அடுத்த செய்தி