• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர் அடித்த துண்டு பிரசுரம் இணையத்தில் வைரல்...

உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர் அடித்த துண்டு பிரசுரம் இணையத்தில் வைரல்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மக்கள் சேவை செய்தால் விவாகரத்து செய்வேன் என்று மனைவி கூறியும், மக்கள் சேவையை தொடருவேன் என்று தோல்வியைத் தழுவிய சமூக ஆர்வலர் கூறியுள்ளார்.

  • Share this:
    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பெண்ணலூர் ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட சமூக ஆர்வலர் முத்து, வெறும் ஆறு வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

    தோல்வி அடைந்த வேட்பாளர் முத்து பென்னலூர் 9வது வார்டு பகுதியில் உள்ள மக்களுக்கு வீடு வீடாக சென்று நன்றி தெரிவித்து துண்டு பிரசுரம் வழங்கினார். அந்த துண்டு பிரசுரத்தில், தோல்வி அளித்ததற்கு நன்றி எதற்கு என்று கேட்கலாம், வாக்குகளில் தோற்கடித்து வாழ்க்கையில் ஜெயிக்க கற்று கொடுத்துள்ளீர்கள்.

    25% பந்தத்தின் பிடியில் ஓட்டு பிரிந்தது.
    25% பணத்தின் பிடியில் ஓட்டு பிரிந்தது
    25% பாட்டிலின் பிடியில் ஓட்டு பிரிந்தது.
    25% நம்ப வைத்து பொய்யாக்கி வாக்கு பிரிந்தது

    உங்களை அனைவரையும் பற்றி புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. உடைந்து போவேன் என நினைக்க வேண்டாம், எப்போதும் போல் சமூக சேவை தொடரும் என அச்சடித்து வழங்கி வருகிறார்.

    உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர் அடித்த துண்டு பிரசுரம் இணையத்தில் வைரல்...


    மேலும் அவர் கூறுகையில், நான் ஒரு சமூக சேவகர். என் கிராம மக்களுக்கு எண்ணற்ற சேவைகள் செய்து இருக்கிறேன். அதனால் நம்பிக்கையோடு இந்தத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன். நான் குடியிருக்கிற 9வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட என் மனைவியை நிறுத்தினேன்.

    ஆனால், வெறும் 6 ஓட்டுகளே எங்களுக்கு கிடைத்தது. ஆகவே மன உளைச்சலுக்கு ஆளான என் மனைவி இனிமேல் ஊருக்கு நல்லது செய்கிறேன் என்று சென்றால் உன்னை டைவர்ஸ் செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். இருந்தாலும் நான் மக்களுக்கு சேவை செய்வேன் என்று அவர் கூறியது பெருமிதம் அளிக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: