காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத்திருவிழா நடைபெற்றது. கொரானோ காரணமாக, முதல் முறையாக பக்தர்கள் இன்றி தெப்ப திருவிழா நடந்தப்பபட்டது.
சென்னையை அடுத்த மாங்காட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் 17ஆம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் அன்று மூன்று நாட்கள் தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், நேற்று முதல் நாள் தெப்பத்திருவிழா பக்தர்களின் ஆரவாரமின்றி அமைதியாக நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அமைந்துள்ள திருக்குளத்தில் நடைபெற்ற இவ்விழாவில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இத்தெப்பத் திருவிழாவில், கோயில் அலுவலர்கள், முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டமின்றி தெப்பத்திருவிழா அமைதியாக நடைபெற்றது.
Must Read : சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாங்காடு கோயில் நிர்வாகம் சார்பில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் இலட்சுமணன் மற்றும் கோயில் பரம்பரை தர்மகர்த்தா மணலி டாக்டர் சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்டனர்.
செய்தியாளர் - சோமசுந்தரம், பூந்தமல்லி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.