காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியா குழந்தைகளுக்கு மாலை அணிவித்து பூக்கள் தூவி மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் 19, மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். அந்தவகையில் காஞ்சிபுரம் அடுத்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு கோவிந்தவாடி அகரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற தட்சிணாமூர்த்தி கோவிலில் ஊராட்சி மன்ற தலைவர் பாக்யராஜ் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு மாலை அணிவித்தனர்.
மாணவர்களுக்கு தேவையான பேனா பென்சில் கொடுத்து வழி நெடுக மேளதாள நாதஸ்வர மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக தொடக்கப்பள்ளி வரை குழந்தைகளுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர்கள் கை கழுவும் திரவம் முக கவசம் மற்றும் பூக்கள் போட்டு இனிப்புகள் கொடுத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சுமார் 19 மாதங்கள் கழித்து பள்ளிக்கு வருவதால் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
செய்தியாளர்: சந்திரசேகர் (காஞ்சிபுரம்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.