ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

செய்யாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. மகரல் பகுதியில் பாலத்தில் போக்குவரத்து தடை

செய்யாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. மகரல் பகுதியில் பாலத்தில் போக்குவரத்து தடை

போக்குவரத்து தடை

போக்குவரத்து தடை

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள செய்யாற்றில் நீர் வரத்து காரணமாகவும் , பாலம் பாதுகாப்பு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 30 கிராம மக்கள் 20கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது,

    தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வந்தது. இதன்காரணமாக செங்கம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் தோன்றும் செய்யாற்றில் பெய்த கனமழையால் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கனமழையின் காரணமாக செய்யாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு இதுபோல் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  அதேவேளையில் காஞ்சிபுரம் அடுத்த மகரல் பகுதியில் உள்ள செய்யாற்றில் அதிக நீர்வரத்து காரணமாக காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள செய்யாற்றில் நீர் வரத்து காரணமாகவும் , பாலம் பாதுகாப்பு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 20கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Published by:Ramprasath H
    First published:

    Tags: Flood, Flood alert, Heavy rain, Kancheepuram, Rain, Rain Update, Thiruvannamalai, Weather News in Tamil