வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் முக்கிய நீர்நிலைகளில் ஆயிரத்து 600 மில்லியன் கனஅடிநீர் அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 67 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது. 127 ஏரிகள் 75 சதவீதம் தனது கொள்ளளவை எட்டியுள்ளது. 206 ஏரிகள் 50 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது. 180 ஏரிகள் 25 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது. 324 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக தனது கொள்ளளவை எட்டியுள்ளது. 4 ஏரிகள் நீர்வரத்து இல்லாமல் உள்ளது என பொதுப்பணி துறை தெரிவித்துள்ளது.
இதில் ஏரையூர், செம்பாக்கம், நத்தப்பேட்டை, வையூர் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வையாவூா், நத்தப்பேட்டை, எறையூா் தேவனேரி, தாத்தனூா், குண்டுப் பெரும்பேடு, ஆரனேரி பெரிய ஏரி, நன்மங்கலம், புளிக்கொரடு இடும்பன் ஏரி, செம்பாக்கம் ஆகிய ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.
மேலும் படிக்க...செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் 22 அடியை நெருங்குகிறது.. கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..
செங்கல்பட்டு மாவட்டத்தில் கோலம்பாக்கம், எம்.என்.குப்பன் சித்தேரி, புக்கத்துரை பெரிய ஏரி, பட்டரைக் காலனி ஏரி உள்பட மாவட்டம் முழுவதும் 54 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpet, Heavy Rainfall, Kancheepuram, Monsoon rain, North East Monsoon