Weather | தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும்

Weather | தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும்

கோப்புப் படம்

தமிழகத்தில் இன்று முதல் 22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதில் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வருகிற 21.04.2021 முதல் 23.04.2021 வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.

    இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மற்றும் கரூர் ஆகிய 22 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க...செங்கல் சூளையில் கூலித் தொழிலாளி மர்ம மரணம்.. 3 பேர் கைது..

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ராசிபுரம் 3, ஓட்டப்பிடாரம், பெரியாறு, மசினகுடி தலா 2, ஆண்டிபட்டி, தக்கலை, சங்கரிதுர்க், தேக்கடி, பெருஞ்சாணி அணை தலா 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும் வரும் நாட்களில் கடலுக்குள் செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: