சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான தஞ்சாவூரில் உள்ள சொத்துகள் அரசுடைமை

இளவரசி - சுதாகரன்

தஞ்சாவூர் மாநகரில் உள்ள சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான 26,540 சதுரடி அளவு கொண்ட சொத்தை தமிழக அரசு கையகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  சசிகலா உறவினர்களான சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான தஞ்சாவூரில் உள்ள சொத்துகளை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியுள்ளது.

  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 2017-ல் உச்சநீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை உறுதியானது.

  இந்த சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா, இளவரசி விடுதலையாகினர். சுதாகரன் இன்னமும் அபராத தொகையை செலுத்தவில்லை. அபராத தொகையை சுதாகரன் செலுத்திவிட்டால் அவரும் சிறையில் இருந்து விடுதலையாவார்.

  இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் கீழ் இளவரசி, சுதாகரனின் சொத்துகள் பலவற்றை தமிழக அரசு அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றது. அதன்படி,நேற்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சொந்தமான மேலும் சில சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  இந்நிலையில், தஞ்சாவூர் வ. உ .சி., நகர் பகுதியில் உள்ள 26,540 சதுர அடி காலி மனையை அரசு இன்று காலை பறிமுதல் செய்துள்ளது.

  மேலும் படிக்க.... சசிகலா தேர்தலில் போட்டியா? சிலீப்பர் செல் யார்? : டிடிவி தினகரன் பேட்டி

  உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி, தஞ்சை மாநகரில் உள்ள சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான 26,540 சதுரடி அளவு கொண்ட சொத்தை தமிழக அரசு கையகப்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: