Home /News /tamil-nadu /

பள்ளி கழிவறையை மாணவி சுத்தம் செய்த வீடியோ வைரல்... தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்

பள்ளி கழிவறையை மாணவி சுத்தம் செய்த வீடியோ வைரல்... தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்

பள்ளி கழிவறையை மாணவி சுத்தம் செய்த வீடியோ வைரல்..

பள்ளி கழிவறையை மாணவி சுத்தம் செய்த வீடியோ வைரல்..

School Student Clean Toilet Video | பள்ளி மாணவி ஒருவர் அந்தப் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் மாணவி ஒருவர் அவர் பயிலும் பள்ளியின் கழிவறையை சீருடையுடன் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைகளில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் பள்ளி காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆலம்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளி என்பது தெரிய வந்தது. அந்த மாணவி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும்  கூறப்படுகிறது. அந்த மாணவியை யாராவது கட்டாயப்படுத்தி கழிவறையை கழுவ சொன்னார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் என்பது தெரியவில்லை.

அந்த மாணவி கழிப்பறையை கழுவும் காட்சிகளை யாரோ ஒருவர் வீடியோ எடுத்தது தெரிய வருகிறது. அந்த நபர் யார் என்பதும் தெரியவில்லை. இந்த காட்சி ஆலம்பாக்கம் கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  எனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை இதனை விசாரணை மேற்கொண்டு இதில் ஏதேனும் உள்நோக்கம் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.



இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பவதி தொடர்புகொண்டு கேட்ட போது,  பள்ளியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள கிராம தூய்மை பணியாளர்கள் இருக்கிறார்கள். தினந்தோறும் அவர்கள் மூலம் பள்ளி வளாகம், கழிவறை அனைத்துமே தூய்மைபடுத்தப்படுகிறது. இந்நிலையில் மாணவியை எதற்காக கழிவறையை சுத்தம் செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உள்நோக்கத்தோடு யாரோ ஒருவர் ஒரு விஷயத்தை கையாண்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது என்றார்.

Also Read : 50 ஆண்டுகள் பாழடைந்த பள்ளி கட்டிடம் முற்றிலும் சேதம்... மாணவர்கள் , பெற்றோர்கள் அச்சம்

இந்நியைில் பள்ளித் தலைமை ஆசிரியை புஷ்பாவதி மீது 17.பி பிரிவின் கீழ் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். ஆனம்பாக்கம் பள்ளியிலிருந்து தலைமையாசிரியை புஷ்பாவதி பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
Published by:Vijay R
First published:

Tags: Kanchipuram, Viral Video

அடுத்த செய்தி