செவ்வாய்கிழமை ரூ300... சிறப்புபூஜைக்கு 1000.. - மது அருந்த வைத்து குறி சொல்லும் விசித்திர சாமியார்

சாமியாரிடம் குறி கேட்கும் மக்கள்

குறி கேட்க வந்த நபருக்கு சாமியார் ஒருவர் புல் பாட்டில் மதுகொடுத்து நிற்காமல் குடிக்க சொல்லி அவருக்கு குறி சொல்லும் காட்சி  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  ஸ்ரீபெரும்புதூர் அருகே குறி கேட்க வரும் நபர்களை மதுஅருந்த வைத்து குறி சொல்லி அனுப்பும் சாமியார் செய்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  பொதுமக்கள்  தங்கள் குடும்ப பிரச்னைகளை தீர்க்க கோரி தங்கள் சமயம் சார்ந்த ஆலயங்களை தேடி சென்று நேர்த்தி கடன் செலுத்துபவர்கள் ஒரு வகையினர். இதனையும் தாண்டி கிராம பகுதிகளில் உள்ள அம்மன் ஆலயங்கள், கருப்புசாமி கோயில், தற்போது திருநங்கைகள் கோயில் பல இடங்களில் சென்று குறி எனும் ஒருவகை ஜோசியம் கேட்பர்.இந்த குறி சொல்லும் சாமியார்கள் ஆடிப்பாடி சொல்பவர்கள், பெண் உடை அணிந்து சொல்பவர்கள் , சுருட்டு பிடித்தபடி சொல்பவர்கள் என பலவகையினர் இருப்பதை அறிந்து இருப்பீர்கள்.

  Also Read:2000 வாங்கிட்டு என்கிட்டயே.. நோ பார்கிங்கில் காரை நிறுத்திவிட்டு ஏகவசனம் பேசிய விஏஓ - வைரலாகும் வீடியோ

  காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் வட்டம், சுங்கச்சாவடி அருகே உள்ள நெமிலி கிராமத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மணி என்பவர் கடந்த பத்து வருடங்கள் முன்பு ஆலயம் அமைத்து செவ்வாய்கிழமை ரூ300 மற்றும் புதன்கிழமை என்றால் சிறப்பு  காணிக்கையாக ரூ1000 என  பெற்று கொண்டு குறி என்ற ஜோசியம் குறிவருகிறார். இதில் நமக்கு கிடைத்த வீடியோ ஒன்றில் குறி கேட்க வந்த நபருக்கு ஒரு புல் பாட்டில் மதுகொடுத்து நிற்காமல் குடிக்க சொல்லி அவருக்கு குறி சொல்லும் காட்சி  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுபோன்று மது அருந்தினால் இவரை உடல்நிலை அபாயநிலைக்கு செல்லும் என அறியாது அவரும் அருந்து நிகழ்வு உயிர்பயத்தை ஏற்படுத்துகிறது.இதை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இமை கொட்டாமல் பார்த்து கொண்டு இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது உடனடியாக இதுகுறித்து காவல்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

  செய்தியாளர்: சந்திரசேகர்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: