அத்திவரதர் வைபவத்தின்போது அத்தி வரதருக்கு உடுத்தப்பட்ட பட்டு வஸ்திரங்களில் முறைகேடு ஈடுபட்டுள்ளதாக RTI மூலம் தெரிய வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
வரலாற்று சான்றாக நிகழ்ந்த அத்தி வரதர் வைபவம் . கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை 48 நாட்கள் அத்தி வரதர் வைபவம் நடைபெற்றது. இதில் ஜூலை 1ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் 18-ஆம் தேதி வரை நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அத்திவரதர். 48 நாட்களில் நடந்த அத்தி வரதர் வைபவத்தில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Also Read: தலிபான்கள் ஆட்சியை பிடித்த நாளில் காபுல் வானில் போராடிய இந்திய விமானம் – திக் திக் நிமிடங்கள்!
தினந்தோறும் லட்சக்கணக்கில் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அத்திவரதருக்கு பட்டாடை வாங்கியதில் ஊழல்.. ஆர்.டி.ஐ-யில் வெளியான பகீர் தகவல்!#Athivarathar | #Kanchipuram | #RTI pic.twitter.com/cddSQLlrjV
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 17, 2021
இதில் 48 நாட்களுக்கும் அத்தி வரதர் வைபவத்தில் அத்திவரதருக்கு பல்வேறு வண்ணங்களில் விலை உயர்ந்த பட்டு அஸ்திரங்கள் பொருத்தப்பட்ட பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Also Read: ஒற்றை சீட்டுடன் கச்சிதமான வடிவில் அறிமுகமான Honda U-BE எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
இவ்வாறு விலை உயர்ந்த பட்டு வஸ்திரங்கள் உடுத்த பட்ட வஸ்திரங்கள் எவ்வளவு கணக்கிடப் பட்டுள்ளது என RTI மூலம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் தகவல் உரிமை சட்டம் கீழ் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த கோவில் நிர்வாகம் சார்பில் திருக் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள், அத்தி வரதர் தரிசனத்திற்கு பின் கோவிலிலிருந்து பாதுகாப்பாக பொதுமக்களை கோவில் வெளியே அனுப்பும் பணியில் அனைத்து அரசு அலுவலகம் ஈடுபட்டுள்ளதால் திருக்கோவில் அன்றாட பணிகள் தள்ளி போடப்பட்டிருந்தது; இதனால் வஸ்திரங்கள் கணக்கிடும் பணி தள்ளிப் போடப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால் விலை உயர்ந்த பட்டு வஸ்திரங்கள் கணக்கீடு செய்யாமல் விலை உயர்ந்த பொருள்கள் மீது ஊழல் நடைபெற்றுள்ளதாக சமூக ஆர்வலர் டில்லிபாபு தெரிவித்துள்ளார்.
சந்திரசேகர் - செய்தியாளர், காஞ்சிபுரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AthiVaradar, Crime News, Kanchipuram, Scam