பூந்தமல்லி அருகே ரூ. 6.5 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி

பூந்தமல்லி அருகே ரூ. 6.5 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி

பணம் பறிமுதல்

மூன்று பெண்கள் வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் ரூ.6.50 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.

 • Share this:
  சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள காக்களூர் பால்பண்ணை பகுயில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.6.50 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன இதனால் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் குறிப்பாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக அனைத்து பகுதியிலும் வாகன சோதனையானது நடைபெற்று வருகிறது.

  அந்த வகையில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் மாவட்டம்,  காக்களூர் பால்பண்ணை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவி தலைமையில் வாகன சோதனை நடைபெற்று வந்தது. அப்போது மூன்று பெண்கள் வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் ரூ.6.50 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.

  அவர்கள் கொண்டுவந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பூந்தமல்லி தாசில்தார் அலுவலகம் கொண்டு வந்து, பூந்தமல்லி தேர்தல் நடத்தும் அதிகாரி பிரீத்தி பார்கவி முன்னியில் ஒப்படைத்தனர்.

  இதனிடையே காரில் வந்த பெண்கள் மாம்பலம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கொண்டு வந்த பணத்தில் மகளில் திருமணத்திற்கு புடவை வாங்க காஞ்சிபுரம் சென்று கொண்டு இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

  Must Read : புதுச்சேரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.2 கோடி பறிமுதல்

   

  எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
  Published by:Suresh V
  First published: