தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் இருந்த ஆர்வம், 45 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் இல்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் லேசான அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் விடுதியில் கொரோனா கவனிப்பு மையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், சென்னையில் 13 இடங்களில் கொரோனா கவனிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் இது போன்ற மையங்கள் மிகவும் கைக்கொடுக்கின்றதாக கூறினார்.
கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளதாகவும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக பின்பற்ற வேண்டும். தற்போது கூடுதலாக தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணி சவாலாக உள்ளதாக கூறிய அவர், போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாக கூறினார்.
கொரோனாவின் தீவிர தன்மையை மக்கள் புரிந்து கொண்டு மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனை மற்றும் கொரோனா கவனிப்பு மையத்தில் மொத்தம் 18,852 படுக்கைகள் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்பது உண்மை அதை நாங்கள் மறுக்கவில்லை, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றார். சுமார் 18 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக கூறிய அவர் தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை குறைவாக உள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவரிடம் இருந்த ஆர்வம் 45 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் இல்லை என்ற அவர் கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் சிறியளவில் அச்சம் உள்ளதாக கூறினார்.
Must Read : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா!
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு மீண்டும்
கொரோனா உறுதியாகியுள்ளதாகவும், ஆனால்
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டால் கொரோனா தீவிரத்தன்மை குறைவாக இருக்கும். தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.