‘கொரோனா பாதிப்பு தஞ்சாவூரில் படிப்படியாகக் குறையும் ஆனால்...’ : ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

ராதாகிருஷ்ணன்

முகக்கவசம் அணியாத 40 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது...

 • Share this:
  தஞ்சாவூரில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையும் என்றும் ஆனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அங்கே கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என்று வலியுறுத்தினார். வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அவ்வாறு அணிந்தால்தான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறினார்.

  தமிழகத்தில் இதுவரையில், முகக்கவம் அணியாத 40 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக கூறினார். நோய் பரவலை தடுக்க தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என வேண்டுகோள் விடுத்தார்.

  கொரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும், மாணவர்களும் பெற்றோர்களும் கவனமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

  Must Read : வாக்காளர்களுக்கு முகக்கவசம் அணிவித்து பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர்

   

  நோய் பரவல் அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு வருவதாகவும், அங்கெல்லாம் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். தஞ்சாவூர் பகுதிகளில் நோய் பரவல் படிப்படியாக குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறிய அவர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகர்ப்பகுதிகளில் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், அங்கெல்லாம் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
  Published by:Suresh V
  First published: