Home /News /tamil-nadu /

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளையும் பொதுவிடுமுறை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளையும் பொதுவிடுமுறை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி

நிவர் புயல் இன்றிரவு தீவிரப் புயலாக கரையைக் கடக்க உள்ளதால் பாதிப்பைக் கருத்தில் கொண்டு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை தொடரும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

    நிவர் புயல் சென்னைக்கு தென்கிழக்கில் 300 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கில் 250 கிலோ மீட்டர் தொலைவில், கடலூருக்கு தென் கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டு மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு புதுச்சேரி அருகே புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் 115 கி.மீ வேகத்தில் இருக்கும்.

    இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மதியத்துக்கு மேல் புயல் கரையைக் கடக்கும் என்பதால் இன்று பொது விடுமுறை என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

    மேலும் படிக்க...பா.ஜ.கவின் தேசிய தலைமை அறிவிக்கும் - எல்.முருகன்

    இந்நிலையில் புயல் மெதுவாக நகர்ந்து வருகிறது. இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும். இதனால் டெல்டா, வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CM Edappadi Palaniswami, Cyclone Nivar, Tamilnadu government

    அடுத்த செய்தி