இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்... இறுதியில் முதல்வர் வேட்பாளர் யாரோ அவரை ஏற்போம் - பிரேமலதா!

இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்... இறுதியில் முதல்வர் வேட்பாளர் யாரோ அவரை ஏற்போம் - பிரேமலதா!

பிரேமலதா

விரைவில் பொதுக்குழு, செயற்குழுவை கூட்டி கூட்டணி குறித்து இறுதி முடிவை விஜயகாந்த்  அறிவிப்பார் என்று பிரேமலதா தெரிவித்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். கூட்டணியின் இறுதியில் முதல்வர் வேட்பாளர் யாரோ அவரை ஏற்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

  தேமுதிக சார்பில் சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.

  பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி 3 மணிவரை நடைபெற்ற  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 4 மாவட்ட   தேர்தல் பொறுப்பாளர்கள் , மாவட்டச் செயலாளர்கள் , தொகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் என 75 பேர் பங்கேற்றனர்.

  4 மாவட்டங்களிலும் தேமுதிகவிற்கு சாதகமான  தொகுதிகள் எவை, பூத் கமிட்டிகளை அமைப்பது ,  தேர்தல் கூட்டணி  குறித்த பொறுப்பாளர்களின் கருத்துகள் இந்த கூட்டத்தில்  கேட்டறியப்பட்டது.

  குறிப்பாக கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக சென்னை மண்டலத்தில் வெற்றி பெற்றிருந்த 8 சட்டமன்றத் தொகுதிகளையும் மீண்டும் கேட்டுப் பெற வேண்டுமென நிர்வாகிகளில் சிலர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

  அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா பேசியபோது, தேமுதிக 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். தேமுதிகவினர் தேர்தல் பணியை தொடங்கிவிட்டோம். தேர்தல் வியூகம், பூத் கமிட்டி  குறித்து இன்று ஆலோசனை நடத்தினோம். நிர்வாகிகள் கருத்துப்படி தேமுதிகவினர் தேர்தல்  வியூகம் அமைப்போம் என்று கூறினார்.

  Also read... Gold Rate: சவரனுக்கு ரூ.144 உயர்ந்தது தங்கத்தின் விலை... மாலை நிலவரம் என்ன?

  தொடர்ந்து பேசிய பிரேமலதா, விரைவில் பொதுக்குழு, செயற்குழுவை கூட்டி கூட்டணி குறித்து இறுதி முடிவை விஜயகாந்த்  அறிவிப்பார். தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி , எங்களுக்கான சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிடுவோம்.
  கடந்த காலத்தில் சில நிர்வாகிகள் வெளியேறியதன் மூலம் தேமுதிகவில் இருந்த குப்பைகள் கழிந்து விட்டது , அதற்கு உதவிய கட்சிகளுக்கு நன்றி. இப்போது இருப்போர் முத்துக்கள் போன்றோர் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

  மேலும், அதிமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் பெறுவோம் என ஒருதலைப்பட்சமாக இப்போது  நான் கூற முடியாது.
  அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியால் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில் நாங்கள் அது குறித்து கருத்து கூற முடியாது.  கூட்டணியின் இறுதி முதல்வர் வேட்பாளர் யாரோ அவர்களை ஏற்போம் என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: