காஞ்சிபுரத்தில் மாமூல் தரமறுத்த வளையல் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் வளையல் கடை நடத்தி வருபவர் சித்ரா. கணவனைல் கைவிடப்பட்டு கை குழந்தையை வளர்க்க வளையல் கடை வைத்துள்ளார். வளையல் கடையில் 50,000 ரூபாய் மாமுல் கேட்டு மிரட்டியும் இல்லை என்றால் கடையை அகற்ற சொல்லி அதிமுகவை சேர்ந்த திலகவதி மிரட்டல் விடுத்துள்ளார்.
சித்ரா பணம் தர மறுத்ததால், அவரை சாலையில் இழுத்து போட்டு திலகவதி தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட சித்ரா கொடுத்த புகாரின் பேரில் சிவ காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அதிமுக நிர்வாகி திலகவதியை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
-செய்தியாளர்: சந்திரசேகர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.