காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை வேளிங்கப்பட்டரை ஆசிரியர் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரின் மகள் சரண்யா (வயது 24). மாற்றுத்திறனாளியான இவர் காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூரில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி சரண்யா களக்காட்டூரில் உள்ள அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அந்த மையத்தில் கழிவறை வசதி இல்லாததால், அருகில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார். அப்போது அங்குள்ள பாதி கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இருந்த கழிவு நீர் தொட்டியின் மீது கால் வைத்த போது, அதன் ஓடு உடைந்து சரண்யா கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், சரண்யாவை உடனடியாக மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சரண்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Must Read : எலக்ட்ரிக் பைக் சார்ஜ் செய்யும்போது தீ விபத்து - வேலூரில் தந்தை, மகள் உயிரிழப்பு
இந்த மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி ஊழியர் சரண்யாவின் குடும்பத்திற்கு ரூ.13 லட்ச ரூபாய் இழபீடு வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.