Home /News /tamil-nadu /

ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்காது, அதற்கு வாய்ப்பில்லை: சுப்பிரமணியன் சாமி

ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்காது, அதற்கு வாய்ப்பில்லை: சுப்பிரமணியன் சாமி

யாராலும் இனி சேது சமுத்திரத் திட்டத்தை தொட முடியாது. முதல் மனுவில் சேது சமுத்திரத் திட்டத்தை தொடக்கூடாது என்பது குறித்து வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்காது, அதற்கு வாய்ப்பில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி  தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் ஓரிக்கை அடுத்த உள்ள மகா பெரியவர் மணி மண்டபத்தில் ஸ்ரீகால சாந்தி வைபவ நிகழ்ச்சி காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சாமி முன்னிலையில் நடைபெற்றது. இதில் பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஆன சுப்பிரமணியன் சாமி, எச்.ராஜா மற்றும் மடாதிபதிகள் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில், திராவிடம் என்று கூறி வந்த கருணாநிதி அவர் பெயரிலேயே கருணா என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் உள்ளது. நிதி என்று சொல்லும் சமஸ்கிருத வார்த்தை தான். உதயசூரியன் என்ற சொல்லும் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது என சுப்பிரமணியன் சுவாமி ஓரிக்கை மகாபெரியவர் மணி மண்டபத்தில் பேசினார்.

Also Read: ஆபாச வீடியோ.. பாலியல் வன்கொடுமை - சென்னையில் துணை நடிகைக்கு நேர்ந்த கொடூரம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது, சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது அது முடிவுக்கு வந்துவிட்டது.

ராம சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளேன். இங்கு உள்ள சில முட்டாள்தனமான அமைச்சர்கள் மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்தை ஆரம்பிப்போம் என கூறி வருகிறார்கள்.

யாராலும் இனி சேது சமுத்திரத் திட்டத்தை தொட முடியாது. முதல் மனுவில் சேது சமுத்திரத் திட்டத்தை தொடக்கூடாது என்பது குறித்து வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்றிருக்கிறேன்.

பாரம்பரிய சின்னமாக அறிவிக்க உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வருகிற 22-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது அது முடிந்துவிட்டது என்றார்.

தொடர்ந்து அவரிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெறுமா என்று கேட்டதற்கு, அவர் நடைபெற வாய்ப்பில்லை நடக்காது என்றும் தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published:

Tags: BJP, Subramanian Swamy

அடுத்த செய்தி