காஞ்சிபுரத்தில் ஒருவர்கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை

காஞ்சிபுரத்தில் ஒருவர்கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஶ்ரீபெரும்புதூர் சட்ட மன்ற தொகுதிகளில் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

 • Share this:
  தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், காஞ்சிபுரத்தில் ஒருவர்கூட இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

  வேட்புமனு தாக்கலுக்காக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜலட்சுமி ஏற்பாடு செய்திருந்தார். அதேபோல, பிற இடங்களிலும் ஏற்பாடுகள் டைசப்பட்டன. கொரோனா நோய் தொற்று காரணமாக சானிடைசர் மற்றும் முக கவசம் அணிந்து உள்ளே வரவேண்டும் என்பதால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

  இதேபோ ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்காக, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

  Must Read : திமுக வேட்பாளர் பட்டியலில் 9 மருத்துவர்கள், 28 வழக்கறிஞர்கள் - முழு விவரம்

   

  இந்நிலையில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஶ்ரீபெரும்புதூர் சட்ட மன்ற தொகுதிகளில் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
  Published by:Suresh V
  First published: