காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலயத்தில் நவராத்திரி உற்சவத்தின் 3-ம் நாளில் செந்தூர பட்டு உடுத்தி, முத்துமாலை, பாதாம் பருப்பு மாலை அணிந்துகொண்டு, சந்திர பிறையுடன் காட்சியளித்த காஞ்சி காமாட்சியம்மன்.
சக்தி தலங்களில் முதன்மைத் தளமாக விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலயத்தில் நவராத்திரி உற்சவம் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் உற்சவத்தையொட்டி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து, செந்தூர பட்டு உடுத்தி, முத்து மாலை,பாதாம் பருப்பு மாலை, மலர் மாலைகள், அணிவித்து லக்ஷ்மி,சரஸ்வதி தேவியருடன் காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவில் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து நவராத்திரி கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.
நாதஸ்வர,மேள வாத்தியங்கள் ஒலிக்க கொலு மண்டபத்திற்கு எழுந்தருளிய காமாட்சி அம்மன் வேத மந்திரங்கள் ஒலிக்க மகிஷ வதம் நடைபெற்றதை தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள் காரணமாக காமாட்சி அம்மனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையான நேற்று பக்தர்கள் அனுமதியின்றி நவராத்திரி உற்சவம் நடைபெற்றது.
செய்தியாளர்: சந்திரசேகர் (காஞ்சிபுரம்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.