பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லும் கமல்ஹாசன் - சீமான் விமர்சனம்

கமல்ஹாசன்

கமல்ஹாசன் விமானத்தில் செல்வதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

  • Share this:
தேர்தல் நாள் நெருங்கி வருவதையொட்டி அனைத்து கட்சியினரும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக கட்சித் தலைவர்கள் தமிழகத்தின் பல மூலைகளுக்கும் சென்று பரப்புரை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்புவரை பேருந்துகளிலும் ரயில்களிலும் சென்று வாக்கு சேகரித்த கட்சித்தலைவர்கள் அதற்கு அடுத்த கட்டமாக கார்களில் சென்று வாக்கு சேகரிக்க தொடங்கினர். இந்த முறையை மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறார்.

ஒவ்வொரு பகுதிக்கும் கமல்ஹாசன் தனி விமானம் மூலமாகவும் ஹெலிகாப்டர் மூலமாகவுமே பயணம் செய்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் சென்றார் கமல்ஹாசன். அங்கே பிரச்சாரத்தை முடித்து இரவு நேரமாகி விட்டதால் அங்கேயே தங்கி விட்ட கமல்ஹாசன் திங்கட்கிழமை காலை மீண்டும் ஹெலிகாப்டர் மூலமாக சென்னை வந்தடைந்தார்.

சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்வதற்கு சென்னையில் இருந்து பல விமானங்கள் இருந்தாலும் தனி விமானத்தை ஒப்பந்தம் செய்து கமலஹாசன் அதில் புறப்பட்டு சென்றார். இதுகுறித்து ஒரு முறை கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது நான் எப்படி ஆடுகிறேன் என்பதை பார்க்காதீர்கள் பந்து எங்கே போய் விழுகிறது என்று பாருங்கள் என பதிலளித்தார்.

இதுகுறித்து விமர்சனம் செய்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கமல்ஹாசன் பறப்பதற்கு அவருக்கு பிக்பாஸில் இருந்து பணம் வந்ததாக கூறினார். ஆனாலும் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் வந்து விட்டு போகட்டும் என்றார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: