காஞ்சிபுரத்தில் கொரோனா நோய் தொற்று விதிகளை மீறி செயல்பட்டு வந்த 10க்கும் மேற்பட்ட பட்டு சேலை கடைகள் சீல் வைத்து நகராட்சி ஊழியர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் விதிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றன. அந்த வகையில் பட்டு சேலை மற்றும் துணி கடைகளுக்கு தற்போது வரை அனுமதி வழங்கப்படாத நிலையில் ஊரடங்கிள் அமலில் உள்ளன.
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் திருமணத்திற்கான சுபமுகூர்த்தம் இல்லாத காரணத்தால் ஆனி மாதம் மாதம் அதிக அளவில் சுபமுகூர்த்தம் நாட்களில் திருமணம் நடைபெறுவது வழக்கம்.
பட்டு நகரமான காஞ்சிபுரத்தில் திருமணத்திற்காக பட்டு சேலை வாங்குவதற்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காஞ்சிபுரத்திற்கு உள்ள காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பர் தெரு, பாவா பேட்டை தெரு, T.K நம்பி தெரு என பல்வேறு இடங்களில் 1000க்கும் பட்டு சேலை கடைகள் உள்ளன. இங்க உள்ள பட்டுசேலை கடைகளுக்கு அதிக மவுசு இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பட்டுசேலை வாங்குவதற்கு காஞ்சிபுரம் வருவது வழக்கம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தற்பொழுது கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக பட்டு சேலை கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சுபமுகூர்த்த காலங்களில் அதிக அளவில் பொதுமக்கள் வாங்குவதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள பாவா பேட்டை தெருவில் உள்ள N.C.S. சில்க் அவுஸ் மற்றும் டி கே நம்பி தெரு உள்ள பிரபல பட்டு சேலை கடை செங்கல்வராயன் சில்க் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கடைகள் கடையின் பின்புற கதைவை திறந்து மேலும் அதன் அருகே உள்ள வீடுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டம் கூட்டமாக சமூக விளைவுகள் இல்லாமலும் முககவசம் இல்லாமலும் பட்டு சேலை விற்பனை ஜோராக நடைபெற்று வந்தன.
இதை தொடர்ந்து தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் கடை கடையாக சென்று கடையின் பின்புறம் மற்றும் கடையின் அருகே உள்ள வீட்டு சந்துகளில் சென்று ஆய்வு செய்து சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இன்று ஒரே நாளில் 10 க்கும் மேற்பட்ட கடைகள் பூட்டி சீல் வைத்து 15க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ.5000 அபராதம் விதித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சேஷாத்திரி பாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 200க்கும் மேற்பட்டோர் விதிகளை மீறி கூட்டம் கூடி திருமண நிகழ்ச்சி நடைபெற்ற தனியார் திருமண மண்டபத்தில் 5 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி ஊழியர் நடவடிக்கை எடுத்தனர்.
செய்தியாளர் - சந்திரசேகர்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.