அதிமுக-வில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்

அதிமுக-வில் இணைந்த ரஜினி மக்கள் மன்றத்தினர்

திருப்போரூர், மதுரவாயல், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட ஒன்றியத்தின் செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளை அதிமுகவினர் வரவேற்றனர்.

  • Share this:
ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று அதிமுக-வில் தங்களை இணைத்து கொண்டனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்வு சென்னை ராயப்பேட்டை ஹேமமாலினி மண்டபத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஜெ.ஜெயகிருஷ்னன் தலைமையில் 500 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

திருப்போரூர், மதுரவாயல், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட ஒன்றியத்தின் செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளை அதிமுகவினர் வரவேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, வைத்தியலிங்கம் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, பென்சமின், மாஃபா ஆகியோர் கலந்துகொண்டனர். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., இணைந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Published by:Vijay R
First published: