காஞ்சிபுரம் அருகே 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன வாலிபர் கீழ்கதிர்பூர் கிராமத்திலுள்ள விவசாய கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 25 இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணவில்லை என அவரது குடும்பத்தினர் சிவகாஞ்சி போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, காணாமல் போன மணிகண்டன் குறித்து சிவகாஞ்சி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கீழ்கதிர்பூர் கிராமத்தில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு சிறிது தூரத்தில் உள்ள விவசாய கிணற்றில் துர்நாற்றம் வீசுவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் கீழ்கதிர்பூர் பகுதிக்கு விரைந்து வந்த பாலுசெட்டி சத்திரம் போலீசார் விவசாய கிணற்றில் கிடந்த உடலை தீயணைப்புத் துறையினர் உதவியோடு மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விசாரணையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பாலுசெட்டி சத்திரம் போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து, வாலிபர் மணிகண்டன் தவறி விழுந்து இறந்தாரா?, தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also read: தமிழ் மொழிக்கென இருக்கும் ஒரே அமைச்சகத்தையும் மெல்ல உருமாற்றிச் சிதைக்கும் திமுக: சீமான் கண்டனம்
மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன வாலிபர், சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பிள்ளையார் பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.