Home /News /tamil-nadu /

எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி என்பதால் ஸ்டாலினுக்கு காழ்ப்புணர்ச்சி - அமைச்சர் பாண்டியராஜன்

எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி என்பதால் ஸ்டாலினுக்கு காழ்ப்புணர்ச்சி - அமைச்சர் பாண்டியராஜன்

மாபா பாண்டியராஜன்

மாபா பாண்டியராஜன்

யார் கரும்புள்ளி செம்புள்ளி, யார் பெரும்புள்ளி என்பதை வரும் தேர்தல் முடிவு எடுக்கும்....

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி என்பதால் ஸ்டாலினுக்கு காழ்ப்புணர்ச்சி என்றும், யார் கரும்புள்ளி செம்புள்ளி, யார் பெரும்புள்ளி என்பதை வரும் தேர்தல் முடிவு எடுக்கும் எனவும் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் உத்திர மேரூரில் பேசியதற்கு அமைச்சர் பாண்டியராஜன் பதிலளித்து பேசினார்.

    சென்னையை அடுத்த ஆவடியில் அமைச்சர் பாண்டியராஜன் மீண்டும் போட்டியிகிறார். இதற்காக பல்வேறு பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல, மாற்று கட்சியினரும் அதிமுகவில் இனைப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

    அந்தவகையில், ஆவடி மாநகர் ரஜினி மக்கள் மன்ற மாநகர் செயலாளர் ஜான் காந்தி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமைச்சர் பாண்டியராஜன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

    பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய முதல்வராக 5 ஆண்டு வெற்றிகரமாக ஆட்சியை நடப்பதற்கு அடித்தளம் இட்டவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள். அடிப்படையில் அவர் ஒரு விவசாயி என்பதால் ஸ்டாலின் அவர்களுக்கு அவர் மீது காழ்ப்புணர்ச்சி இருக்கிறது.

    அந்த காழ்ப்புணர்ச்சியை எல்லா இடத்திலும் காட்டிக் கொண்டு வருகிறார் ஸ்டாலின். ஏனென்றால் மீண்டும் முதல்வராக எடப்பாடியார் வருவார் என்பது மக்களுடைய ஏகோபித்த கருத்தாக இருக்கிறது. இதனால், மீண்டும் விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஸ்டாலின் அவர்கள் இந்த கருத்தை சொல்லி இருக்கிறார்.

    யார் கரும்புள்ளி செம்புள்ளி, யார் பெரும்புள்ளி என்பதை வரும் தேர்தல் முடிவு எடுக்கும் கண்டிப்பாக எங்களைப் பொறுத்தவரை, தமிழகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஒவ்வொரு தேர்தலிலும் ஸ்டாலின் அவர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

    2011 தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூட தகுதி இல்லை என்று மக்கள் தீர்மானித்தார்கள். இந்த முறை பலமுனை போட்டியிருக்கும் நேரத்தில், கண்டிப்பாக எதிர்க்கட்சி தலைவர் என்கிற பதவியை தக்கவைத்து கொள்ளவேண்டும் என்றால் இந்த மாதிரி மக்கள் விரும்பாத கருத்துக்களை ஸ்டாலின் சொல்ல கூடாது.

    Must Read : ஐயா.. 12-ம் வகுப்புக்கு பாஸ் போடுங்க... - பிரச்சாரத்தின்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் மாணவர்கள் கோரிக்கை

     

    ஏனென்றால் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி யாரை எங்கே வைத்திருக்கிறார்கள் தமிழக மக்கள் என்பது அவருடைய மனசாட்சிக்கு தெரியும். இந்த தேர்தலில் பெரும் புள்ளியாக எடப்பாடி பழனிசாமியைத்தான் மக்கள் வைத்திருக்கிறார்கள். சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல் சென்ற இடத்திலெல்லாம் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கிறார்கள்.” என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, All India Anna Dravida Munnetra Kazhagam‎, Avadi Constituency, K.Pandiarajan, TN Assembly Election 2021

    அடுத்த செய்தி